Published on 04/10/2021 | Edited on 04/10/2021

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருச்சியில் நடைபெற்றுவரும் பணிகளைப் பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள, திருச்சி மாநகராட்சி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. www.smarttrichy.in என்ற இணையதளத்தில் திருச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த பணிகள் குறித்தும், தற்போது நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்த இணையத்தில் புவியியல் தகவல் அமைப்பு (ஜி.பி.எஸ்.) மேப்பிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.