கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் வீசி 4 நாட்கள் ஆசியும் இன்னும் இயல்பு நிலைக்கு புதுக்கோட்டை பொதுமக்கள் திரும்பவில்லை.
சேதமடைந்த மின்கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக உடனடியாக புதியவை பொருத்த முடியாததால் மின்சாரம் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது.
குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க நினைத்தாலும் உரிய தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். சிலர் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் குடிநீர் கேன் விலை மற்றும் எரிபொருள் கேஸ் விலை கடுமையான விலையேற்றம் அடைந்துள்ளது. குடிநீர் கேன் விலை ரூபாய் 100க்கு விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்கும் விற்பனை செய்கின்றனர்.