சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் மோகன் தாஸை அதிரடியாக தென் மண்டலத்திற்கு தூக்கி அடித்திருக்கிறார் டிஜிபி திரிபாதி. விஷயம் இதுதான். தனது நண்பர்களுக்கு பார்ட்டி என்ற பெயரில் மது விருந்து நடத்தியிருக்கிறார். இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை டிஜிபிக்கு நோட் போட்டு அனுப்ப டிரான்ஸ்பர் வரை விவகாரம் சென்றிருக்கிறது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மோகன்தாஸுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். "அய்யா இப்ப மட்டுமா பார்ட்டி வச்சார்.அவர் இதுக்கு முன்னாடி சங்கர் நகர், மெரினா, மயிலாப்பூர் காவல் நிலையங்களில் வேலை பார்க்கும் போது பார்ட்டி வச்சிருக்கார். இதை புடிக்காதவன் போட்டுக் கொடுத்திருக்கான்" என்றனர்.
இன்ஸ்பெக்டர் மோகன்தாஸுக்கு மார்ச் 09- ந்தேதி தான் டிரான்ஸ்பர் ஆர்டர் போடப்பட்டது. மறுநாள் பைசுதீன் என்பவர் 10 லட்சம் ரூபாய் கடனுக்காக கடத்தப்பட்டார். தகவலறிந்து வந்த மோகன்தாஸ் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை மடக்கிப் பிடிக்கும்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கீழே உருண்டு புரண்டு சண்டை போட்டு கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தார் மோகன்தாஸ்.
கடத்தல் கும்பலை பிடித்ததற்காக பாராட்டிய கமிஷ்னர் ஏ.கே.வி. "டிரான்ஸ்பர் மேட்டர் என் நாலெட்ஜ்க்கு வரவே இல்லை. நீங்க சவுத் சோன்ல ஜார்ஜ் எடுங்க. திரும்ப அழைச்சுக்கிறேன்" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி உள்ளார்.