Published on 23/04/2020 | Edited on 23/04/2020
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக மே 03 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் உணவகங்கள் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டன. தமிழகத்தில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கட்டிட தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட ஏழை மக்களையும், கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று (23.04.2020) சென்னை, சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட இலவச உணவுகளை அப்பகுதி மக்கள் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.