
திராவிடர் கழகம் சார்பில் இன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற இருந்த சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கலைஞரின் உடல்நிலை குறித்து நேற்று மாலை காவேரி மருத்துவமைனயின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைப் பராமரிப்பது ஒரு சவாலாக இருக்கிறது.
தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பதன் அடிப்படையிலேயே அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டிருந்தது. இந்ந அறிக்கை திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருந்த சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.