Skip to main content

காபி தூள் இல்லமால் எப்படி காபி போடமுடியும்;பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் அமைச்சர் பேச்சு!!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

 

 

பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக,பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது பல்லாயிர கணக்கானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழியாக மனு கொடுக்கவிருக்கிறது பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு. இன்று (21-12-2018) தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு கடை அடைப்பு செய்கிறது சிவகாசி வர்த்தகர்கள் சங்கம். 

 

protest


‘பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட விதியை மாற்றி, புதிய விதியை ஏற்படுத்தும் அதிகாரம், அரசியல் சாசனத்தில் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படவில்லை.’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘பசுமைப் பட்டாசுகள் அல்லது குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும்; விற்பனை செய்யப்பட வேண்டும்.’ என்ற உத்தரவானது, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் முடக்கிப்போட்டு, சிவகாசியில் அனைத்துப் பட்டாசு ஆலைகளையும் மூட வைத்துவிட்டது. தமிழக அரசு,  பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிப்பதற்கு மத்திய அரசினை வலியுறுத்தித் தீர்வு காண வேண்டும். அதற்கான வரைவினை தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் கோரிக்கையாக உள்ளது.

 

protest

 

விருதுநகரில் உள்ள 1070 பாட்டாசு ஆலைகளிலிருந்தும் பேருந்துகள் மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். கடந்த நவம்பர் 13 ஆம் தேதியிலிருந்து பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. பட்டாசு தொழிலையே நம்பியிருந்த மக்கள் வேலையிழந்ததால் உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வேறு வேலைக்கும் செல்லமுடியாத நிலையில் உள்ளனர். பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பு இல்லாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் ஒளி செறிவை வெளிப்படுத்தும் பேரியம் நைட்ரேட் இல்லாமால் எப்படி பட்டாசு தயாரிக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

protest

 

இந்த சூழலில் இந்த போராட்டமானது இந்திய அளவிற்கு கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என லட்சம் பேரை திரட்ட வேண்டும் என முடிவெடுத்த போராட்ட குழு, மக்களை திரட்டி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது பெரும் மக்கள் போராட்டமாக இந்த போராட்டம் மாறியுள்ளது. இந்நிலையில் போராட்ட களத்தில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் ராஜேந்திர பேசுகையில், நானும் ஒரு தொழிலாளிதான், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை முதல் பிரின்டிங் தொழிற்சாலை வரை அனைத்திலும் வேலை செய்துள்ளேன். உங்களின் நிலை எனக்கு தெரியும். காபி தூள் இல்லாமல் எப்படி காபி போட முடியும். முடியாது  அதேபோல் பேரியம் நைட்ரேட் இல்லாமல் எப்படி பட்டாசு தயாரிக்க முடியும்.  சில விஷயங்கள் இருக்கு ஆனால் அவைகளை மீடியா முன்பு சொல்லமுடியாது (பண பேரமாக இருக்குமோ) சட்ட விவகாரங்கள் இருக்கு அதை பொதுவெளியில் பேசக்கூடாது. ஆனால் இது சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து பட்டாசு ஆலைகளை கூடிய விரைவில் திறந்தே தீருவோம் என கூறினார்.

 

protest

 

தோழர் நல்லக்கண்ணு, காங்கிரசை சேர்ந்த ராஜா சொக்கன் மற்றும் பல கட்சிகளை சேர்ந்தவர்களும் மக்கள் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இதுபற்றி தோழர் நல்லகண்ணு கூறும்போது, நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை திறக்கபோகும் அரசு ஏன் பட்டாசு ஆலைகளை மட்டும் நசுக்குகிறார்கள் என கூறினார்.  

 

 

போராட்டத்தில் இறங்கியுள்ள பாட்டசு தொழிலாளியான சவுந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், சாப்பாட்டிற்கே நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். இந்த தொழில் போனால் அடுத்தவனிடன் பணத்தை புடுங்க வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. பட்டாசு தொழில் இல்லாமல் இங்கு ஒன்றும் இல்லை. அச்சு தொழில் கூட பட்டாசு ஆலையை நம்பிதான் இருக்கிறது. வெளியூருக்கு சென்று வேலைபார்க்க எல்லாராலும் முடியாது. தற்போது இங்கு தொழில் இன்றி வாடும் யாராவது வழிப்பறியில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த களங்கமும் சிவகாசிக்குத்தான். அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகமே வியந்து பார்த்த சிவகாசி இன்று ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது என கூறினார்.

 

protest

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர்  தேனி வசந்தன் அமைச்சர் உரையாற்றிய பிறகு மைக்கை பிடித்து மக்கள் முன் பேசுகையில், ஆளும் மத்திய,மாநில அரசுகளுக்கு முன்னவே தெரியாதா? மக்கள் 45 நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என பேச ஆரம்பிக்க  அமைச்சருடன் வந்த சிலர் அரசியல் பேச வேண்டாம் எனக் கூறி அவரை அமர வைத்தனர்.

 

protest

 

தற்போது போராட்டத்தில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களை களைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். சம்பந்தமில்லாத சில கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை சந்தேகிக்க, பிரச்சனை வரக்கூடாது என போலீசார் மக்களை, குறிப்பாக பெண்களை களைந்துபோக அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் ஆலைகள் திறக்கப்பட பேச்சு வார்த்தை நடந்து வருவதால் மக்களை களைய சொல்லி போராட்ட குழு கூறிய நிலையிலும் மக்கள் தொடர் போராட்டத்தில் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.