Skip to main content

ரஷ்ய மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் 4 பேர் கைது– வெளிநாட்டினரை கணக்கெடுக்கும் போலிஸ்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
thiru

 

திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்தா ரஷ்யாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் அலீனாவை விசிறி சாமியார் ஆஸ்ரமத்துக்கு அருகிலுள்ள பேரடைஸ் என்கிற பதிவு பெறாத தங்கும் விடுதியை லீஸ்க்கு எடுத்து நடத்திவந்த பாரதி, அவனது அண்ணன் நீலகண்டன், மணிகண்டன், கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக கற்பழித்துள்ளனர்.


இரண்டு நாள் கற்பழித்ததோடு அவருக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி கொண்டுச்சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர் கொடூரமாக கற்பழிக்கப் பட்டுள்ளதை கண்டறிந்து அந்த மருத்துவமனை நிர்வாகம் தந்த தகவலின்படி காவல்துறை விரைந்து சென்று விசாரணை நடத்தி 5 பேரை தங்களது கஸ்டடிக்கு கொண்டு வந்தது.


அலீனாவை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சையளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு தகவல் சொல்லியதன் அடிப்படையில் சென்னையில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தில் இருந்து அதிகாரியொருவர் வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றார்.


இந்நிலையில் இன்று அலீனா போலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் தந்தார். அதேப்போல் ஆரணி மாஜிஸ்ட்ரேட் மகாலட்சுமி இரண்டு மணி நேரம் வீடியோ வாக்குமூலம் பெற்றார். அதன் அடிப்படையில் பேரடைஸ் விடுதியை நடத்திவந்த பாரதி, நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.


இதுப்பற்றி ஜீலை 19ந்தேதி இரவு 8 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி, கடந்த மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தவர், கடந்த 10ந்தேதி திருவண்ணாமலை வந்துள்ளார். 12ந்தேதி தான் இந்த விடுதியில் வந்து தங்கியுள்ளார். அறையில் இருந்தவரை கற்பழித்துள்ளனர். அலீனாவை கற்பழித்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாததுக்கு காரணம், சம்மந்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்துக்காக காத்திருந்தோம். தற்போது அவர் பேசியுள்ளார். அதன் அடிப்படையில் 4 பேரை கைது கற்பழிப்பு, மானப்பங்கம் படுத்துதல் என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை வாங்கிதரப்படும் என்றவர், மாவட்ட காவல்துறைக்கு தகவல் தராமல் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். அதேப்போல் அப்படி தங்கவைக்கும் விடுதிகள், பதிவு செய்யாத ஹோட்டல்கள், விடுதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சார்ந்த செய்திகள்