
நில அபகரிப்பு செய்ததாக, தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால் என்பவருக்கு சொந்தமான சோழிங்கநல்லூரில் உள்ள நிலத்தை அபகரித்ததாக, தமிழக காவல்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி, அவரது மனைவி மற்றும் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, துக்கையாண்டியும், அவரது மகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். வழக்கு விசாரணையின்போது, தங்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், துக்கையாண்டி மற்றும் அவரது மகள் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.