திருச்சி காமராஜ் நகர் மன்னார்புரத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் ரயில்வே பொறியாளர் முத்துகிருஷ்ணன் வயது 51 திருச்சி ரயில்வே பொறியாளராக 1965- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு மூன்று திருமணங்கள் ஆகியுள்ளது. இவர் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் உல்லாசமாக இருந்து விட்டு பணம் நகை பறிக்கும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ரயில்வே பணியில் செய்த ஊழல்களால் 1991- ஆம் ஆண்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் பின்பு 1997- ஆம் ஆண்டு நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே வேலையிலிருந்து பொறியாளர் முத்துகிருஷ்ணன் நீக்கப்பட்டதால் முசிறி பகுதியில் குடியேறி தன்னை ஒரு மருத்துவர் போல சித்தரித்து பெண்கள் வீடுகளில் தனியாக இருக்கும் போது மருத்துவ சிகிச்சைக்குச் செல்வது போல் சென்று அவ்வீட்டில் இருக்கும் நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளார்.
ஊருக்குத் தகுந்தார் போல் வேடம் அணிந்து தன்னை ரயில்வே நிறுவன பொறியாளர் என்றும், ஒரு மருத்துவராகவும், குடும்ப நண்பராகவும் திட்டமிட்டு வெகு நாட்களாகத் திருட்டில் ஈடுபட்டுள்ள இந்த நபரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் விவரம்...
வாழ்வே புதூரில் 8.1/2 பவுன் நகை, காட்டுப்புத்தூரில் 2 பவுன் நகையும், கவரப்பட்டியில் 4 பவுன், முருங்கையில் 6 பவுன், ரொக்கம் ஒரு லட்சம், சின்ன கொடுந்துறையில் 4 பவுன் நகையும் காட்டுப்புத்தூர் டவுனில் 2 பவுன் நகையும், மேல குண்ணுப்பட்டி துறையூர் வட்டத்தில் 75 ஆயிரம் ரொக்கமும் தெற்கு திரணியாம்பட்டி பகுதியில் ஒன்றரை பவுன் நகைகள் என மொத்தம் 35 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ரூபாய் 75 ஆயிரம் என காவல்துறையினாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் தலைமைக் காவலர் லோகநாதன் முன்னிலையில் முதல் நிலை காவலர் அன்புச்செல்வன், எடிசன் இரண்டாம் நிலை காவலர் ராஜ்குமார், தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காவலர் ஆனந்த் மற்றும் காவலர்கள் இணைந்து குற்றவாளியான முத்துகிருஷ்ணனை ஒரு வாரமாக கண்காணித்து கைது செய்து விசாரித்ததில் மேலே கூறப்பட்ட குற்றச்சம்பவங்கள் உறுதிபட தெரியவந்த அடிப்படையில் குற்றவாளி மீது 9 குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் முசிறி சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நகை மற்றும் பணத்தைப் பறிகொடுத்தவர்களுக்கு முசிறி காவல் ஆய்வாளர் மீட்கப்பட்ட 35 பவுன் நகை மற்றும் 55 ஆயிரம் ரொக்கப்பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை துரிதமாகப் பிடித்த முசிறி காவல் ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் குற்றப்பிரிவு காவலர்களுக்கு முசிறி பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.