Skip to main content

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 11/08/2018 | Edited on 11/08/2018


மேட்டூர் அணை இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடிக்கு தண்ணீர் நிரம்பியது. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு இன்று பகல் 1 மணிக்கு மேட்டூர் அணைக்கு நீர் வந்து விட்டது.

ஏற்கனவே வெள்ள அபாயத்தால் மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணைக்கு வருகிற உபரி நீர் அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் முகாமிட்டுள்ளனர். இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.

படிப்படியாக 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும். இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை டெல்டா பகுதி என 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அதிகாரிகள் அதன் அடிப்படையில் சுமார் இரண்டு லட்சம் கன அடி வரும் என்றும் அந்த இரண்டு லட்சம் கன அடி நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு வீனாக கடலில் கலக்கவுள்ளது.

சார்ந்த செய்திகள்