Skip to main content

திருமூர்த்தி மலையில் வெள்ளப்பெருக்கு... தரைப்பாலம் மூழ்கியது!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

Flood on Thirumurthy hill .... Ground bridge sank!

 

தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிவாரத்தில் உள்ள  திருமூர்த்தி அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் அருவிக்குச் செல்வதற்கான தரைப்பாலம் மூழ்கியுள்ளது.

 

இதனால் அந்த பகுதியில் உள்ள அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமணலிங்கேஷ்வரர் கோவிலிலிருந்து மதியமே பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அமணலிங்கேஷ்வரர் கோவில் மற்றும் அருவி உள்ள பகுதிக்குச் சுற்றலா பயணிகள் செல்லாவண்ணம் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்