Published on 09/01/2020 | Edited on 09/01/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலந்துறைபேட்டை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக, பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு அசுத்தமான குடிநீரை அருந்திய, அக்கிராம மக்கள் 10-க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி , மயக்கம் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு, சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.