Published on 28/08/2020 | Edited on 28/08/2020
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக பெருமாள் சன்னதி உள்ளது. சன்னதிக்கு உட்பட்ட திருக்குளத்தில் மீன்கள் அதிக அளவில் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருக்கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் கழிவு நீர் கலந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மீன்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியாத நிலையில், விரைவில் குளத்தைச் சுத்தப்படுத்தவும், கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.