Skip to main content

பஸ்ட் செட்டில்மென்ட் 150 "சி" தான்..! புலம்பும் மாங்கனி ..

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

அ.தி.மு.க.வில் கூட்டணி என்கிற ரயிலின் எஞ்சின் என்பது அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. மதுரை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கூட்டி வரச் சொல்லி  நாற்காலி நுனியில் அவரை அமர வைத்து காட்டமாக இந்தியில் கர்ஜிக்க தமிழ்நாட்டில் நீங்க தலைமையெல்லாம் இல்லே இங்கும் நாங்க தான் அதைத்தான் அமித்ஷா ஜி இந்தியிலே சொல்றாங்க என வெடவெடத்து அமர்ந்திருந்த ஒ.பி.எஸ்சிடம் மொழிபெயர்த்தார் தமிழிசை. 

 

 first Settlement is 150 "C" ..! Mourning mangani ..

 

கூட்டணி என்கிற ரயில் எஞ்சினை ஓட்டுவது அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா? என நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலில் அந்த ரயிலில் ஏழு பெட்டி எடுத்துக் கொண்டு பயணத்திற்கு தயாராகி வருகிறது பா.ம.க. 

 

 

இன்னும் சில கட்சிகளை பெட்டியில் ஏற்ற அவர்களுடன் பேசி வருகிறது அ.தி.மு.க. இதற்கிடையே கூட்டணி பெட்டியில் ஏறப்போகும் எல்லோருக்கும் தேவையான செலவு தொகையை கொடுக்க வேண்டியது ரயிலை ஓட்டும் எஞ்சின் டிரைவரான அ.தி.மு.க.தான். எனக்கு இத்தனை பெட்டி வேண்டும் என்பதோடு தேவையான செட்டில்மென்ட் மீதும் குறியாக இருக்கிறது பெட்டியில் ஏற தயாராக இருக்கும் கட்சிகள்.

 

 first Settlement is 150 "C" ..! Mourning mangani ..

 

இந்த நிலையில் "மாங்கனி கதை தெரியுமுங்களா?" என்று கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.ஒருவர் சிலாகித்து பேசினார் "அது என்னங்க மாங்கனி கதை என்றோம்" ஆர்வமுடன்

 

"இன்னேரம் தோண்டி துருவி நீங்க எடுத்திருக்க வேண்டாமா? அதையும் நான் தான் சொல்ல வேண்டுமா" என்றவர் தொடர்ந்தார் " அறுசுவை விருந்து எல்லாம் பிரமாதம்தான் விருந்து " மொய் "எல்லாம் ஓ.கே. தான் ஒப்புத் கொண்டது 500 சுவை ஆனால் செட்டில்மென்ட் 150 தானாம். ஒரு பெட்டிக்கு தலா 20 வீதம் 7க்கு 140 கூடுதல் 10 சேர்த்து 150 தான் செட்டில் ஆயிருக்குது ஏன்'ணு மாங்கனி கேட்டதற்கு இது பஸ்ட் அடுத்து நெக்ஸ்ட். அப்புறம் ஒரு நெக்ஸ்ட்டில் டோட்டல் சுவையும் முடியும் என்று ரயில் எஞ்சின் டிரைவர் கூறியிருக்கிறார். இது தான் மாம் கனி கதை" என்றார் 

ஆக இது மாம்பலத்திற்கு ஒருவகையில் ஏமாற்றம் தானோ..? 

 

 

சார்ந்த செய்திகள்