'உங்கள் தொகுதியில் முதல்வர்', 'மக்களைத் தேடி மருத்துவம்', 'இல்லம் தேடி கல்வி' என பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் 'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தையும் தொடங்கிவைத்திருந்தார். இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று (20.12.2021) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வில் 12,834 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் மு.க. ஸ்டாலின் முதல்முறையாகக் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழா இது என்பதும், அதுவும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா என்பதும் குறிப்பிடத்தக்கது.