Skip to main content

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை; தமிழக அரசு அதிரடி

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

first graduate govt job taminadu government go passed

 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனச் சட்டப் பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதனைச் செயல்படுத்தும் வகையில் தற்போது அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்