விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே வீரமூர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டின்போது தொழிலாளர்கள் பதுங்கிக்கொண்டதால் துப்பாக்கி குண்டு மாடு மீது பாய்ந்து மாடு பாடுகாயம் அடைந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு அதிகாலையில் நடந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறியலை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு எஸ்.பி. மற்றும் போலீசார் வந்தனர். யார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது என விசாரிப்பதாக மறியல் செய்தவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
வனத்துறையினர் சுட்டார்களா? அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் அதிக உள்ளனர். அவர்கள் துப்பாக்கி வைத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் சுட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.