Published on 03/04/2020 | Edited on 03/04/2020
வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த புளிமேடு பகுதி மலையடிவாரத்தில், கள்ளச்சாரம் விற்பனை செய்தவர்களை தட்டிக்கேட்டவர்கள் மீது, சாராயம் விற்பனை செய்தவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் புளிமேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன், சங்கர், பிரகாஷ் ஆகிய 3 பேர் காயங்களுடன் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவர சாராய விற்பனையார்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் செல்ல அரியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.