கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உசுப்பூர் கிராமம் பெரிய தெருவில் வசிக்கும் ராமமூர்த்தி வயசு 54 இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் புதன் மாலை அவரது வீட்டில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு பரங்கிப்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு இரவு காவல் பணிக்கு செல்கிறார்.
கார் சிதம்பரம் நகரம் சபாநாயகர் கோயில் தெருவில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பதட்டம் அடைந்த அவர் காரை விட்டு கீழே இறங்கி அருகில் உள்ள கடைகளில் தண்ணீரை வாங்கி ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார்.

இதனிடையே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததால் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். சாலையின் மையத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடியதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக சீர்காழி- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக இருந்தது சரியான நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.