இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்டமன்றம், நிர்வாக அமைப்பு முறையாக இருந்தால்தான் நாட்டை பாதுகாக்க முடியும். இந்தியாவில் பணத்தை மையமாக கொண்டு தேர்தல் நடக்கிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் நீதிமனறத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை காக்க பேச்சு, எழுத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர்களின் வீடுகளிலேயே சிபிஐ சோதனை நடந்துள்ளது. பதவியில் அவர்கள் இருக்கும்போது விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும். பதவியில் இருந்து விலகி குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தேர்தல் வந்தால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று பேசுகிறார்கள். ஆனால் அவர்களால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. இவ்வாறு கூறினார்.