Skip to main content

மருமகளை வீட்டை விட்டுத் துரத்திய மாமனார் மாமியார்; குழந்தைகளுடன் வராண்டாவில் காத்திருக்கும் அவலம்!!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018

கணவர் இறந்து இரண்டாவது மாதத்திலேயே கைம்பெண்ணான மருமகளையும் பேரக்குழந்தைகளையும் மாமனார், மாமியார் வீட்டைவிட்டுத் துரத்தியடித்துள்ள துயரச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்துள்ளது. 

 

 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு வருகின்ற 19-ஆம் தேதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாவும் அறிவித்துள்ளது.

 

Father-in-law who left her daughter-in-law in the house; Worst waiting for kids!

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியில் வசித்து வந்த கண்ணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தலித் வகுப்பைச் சேர்ந்த இவருக்கு நிசாலினி(30) என்ற மனைவியும் கதிரவன்(10), அபிராமி(2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இறந்த கண்ணனின் உடல் அவர்களின் பூர்வீக கிராமமான காட்டாத்தி உஞ்சவிடுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கிராம வழக்கப்படி துக்க நாள் காரியம் முடியும்வரை இறந்த உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்தாக வேண்டும் என்பதால் நிசாலினியும் குழந்தைகளும் காட்டாத்தியிலேயே இருந்துள்ளனர்.

 

 

காரியங்கள் முடிந்து இவர்கள் வசித்த கறம்பக்குடி வீட்டுக்கு வரும்போது கண்ணனின் தந்தை இளவரசன்  பல்வேறு விதங்களில் துன்புறுத்தியுள்ளர். நாங்கள் வாழ்ந்த வீட்டில் வசிக்காமல் வேறு எங்கு செல்வது எனக்கூறிவிட்டு அந்த வீட்டிலேயே நிசாலினி குழந்தைகளுடன் தங்கியுள்ளானர். ஆனால், இவர்களை துரத்திவிட்டு அந்த வீட்டை வேறு நபருக்கு விற்பனை செய்வது என முடிவெடுத்துள்ளார் இளவரசன். இந்நிலையில்,  சனிக்கிழமையன்று நிசாலினி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்த நேரம் பார்த்து ஆலங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் உதவியுடன் பூட்டை உடைத்துவிட்டு மாமனார் இளவரசனும், மாமியார் மனைவி வளர்மதியும் வீட்டுக்குள் குடியேறியுள்ளனர்.  

 

Father-in-law who left her daughter-in-law in the house; Worst waiting for kids!

 

மேலும், நிசாலினி தன்னை அடியாட்கள் வைத்து தாக்க முற்பட்டதாக காவல்நிலையத்தில் புகார்மனுவையும் கொடுத்துள்ளார். 

இரவு வீடுதிரும்பிய நிசாலினிக்கு இந்த தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் மாடியில் ஒரு வீடு இருந்தும் கூட அவர்களை தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி உதவியுடன் கறம்பக்குடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கறம்பக்குடி காவல் நிலையத்திலேயே நிசாலினி மற்றும் குழந்தைகளுடன் காத்திருக்கும் போராட்டத்தை சனிக் கிழமையன்று இரவு நடத்தினர்.

 

இளவரசனும் வளர்மதியும் வீட்டுக்குளேயே தாழ்பாள்போட்டு தங்கியுள்ளதால். அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உறவினர்களும், கட்சியினரும் எவ்வளவோ முயன்றும் அவர்கள் கதவை திறக்கவே இல்லை. இதனால், வேறு வழியின்றி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நிசாலினி குழந்தைகளுடன் வீட்டுமுன் உள்ள வராண்டாவலேயே தங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி,நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.உடையப்பன், எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் உள்ளிட்டோர்  நிசாலினி மற்றும் குழந்தைகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்தும் நிலைமையை விளக்கினர். பிறகு, நிசாலினியுடன் கறம்பக்குடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் மனுவும் அளித்தனர். ஆனால், முதலில் மனுவை வாங்க  போலீசார் மறுத்துள்ளனர். கட்சித் தலைவர்கள் கட்டாயப்படுத்திய பிறகே மனுவை கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.

 

 

எனவே, மாமனாரும், மாமியாரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதற்காக குடும்ப வன்முறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பூட்டை உடைத்து மாமனார், மாமியார் குடியேறுவதற்கு உதவிய ஆலங்குடி காவல் துணைக்கண்கானிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

நிசாலினி மற்றும் அவரது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேற்படி வீட்டிலேயே இவர்கள் வசிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற 19-ஆம்தேதி கறம்பக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக ஐ.வி.நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.