Skip to main content

அரசு மருத்துவமனையில் பழுதான மின்விசிறிகளை மாற்றுத்திறனாளி நண்பர் மூலம் சரி செய்யும் சமூக ஆர்வலர்...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

 

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டுகள் என அனைத்து இடங்களிலும் கரானாவுக்கு முன்பு, ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்கள். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளில் பல இடங்களில் மின்விசிறி ஓடாமல் அப்படியே இருந்து வந்தது. இதனால் நோயாளிகள் சரியான காற்று இல்லாமல் அவதியடைந்து வந்தனர்.

 

இதனை அறிந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத்குமார், மருத்துவரின் அனுமதியுடன் ஓடாமல் உள்ள மின்விசிறிகளையும் பெற்றுக்கொண்டு தனது மாற்றுத்திறனாளி நண்பர் கணபதி மூலம் மின்விசிறிகளுக்கு காயில் கட்டி மறுபடியும் மருத்துவமனைக்கு வழங்கி வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை அவர் சரி செய்து வழங்கியுள்ளார். இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

இதுகுறித்து வினோத்குமார் கூறுகையில், ஒரு மின்விசிறி காயில் கட்ட ரூ.400 வரை தேவைப்படுகிறது. இதுகுறித்து நான் சமூகவலைதளத்தில் பதிவு செய்கிறேன். என் தொடர்பில் உள்ளவர்கள் காயில் கட்ட நேரடியாக பணம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் பெயர் வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். இதுபோன்றுதான் இந்த பணியை செய்து வருகிறேன் என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்