Skip to main content

கார்த்திக் சிதம்பரம் திருச்சி எம்.பி. சீட்டுக்கு சிபாரிசு பண்ணும் பெண் பிரமுகர்!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த சீட்டுக்காக இந்த திருச்சியில் 4 முறை எம்.பியாக இருந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லுயிஸ் திருச்சி லோக்கல் மா.செ. கே.என்.நேரு துணையோடு கடுமையாக சீட்டுக்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கினால் தமிழக அரசியல் கட்சிகளில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.திமுக, பிஜேபியில் மத்திய மந்திரி, காங்கிரஸில் மாநில தலைவர் என்று போகிற கட்சிகளிலில் எல்லாம் முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த திருநாவுக்கரசர் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் இந்த முறை தனக்கு தான் சீட்டு ராகுல்காந்தியே திருச்சி தொகுதியை சிபாரிசு பண்ணிட்டார் என்கிற அளவுக்கு தைரியமாக இருக்கிறார். 

 

karthick chithamparam

 

இந்த நிலையில் சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் அடிக்கடி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கி கொஞ்ச நேரம் அவர்களின் ஆதரவாளர்களிடம் பேசிவிட்டு காரில் சிவகங்கைக்கு செல்வது வழக்கம் சமீப காலமாக அடிக்கடி திருச்சி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

 

அப்போது திருச்சியில் உள்ள சிதம்பரம் அணியை சேர்ந்த முன்னாள் மேயர் சுஜாதா, ஆர்.சிபாபு, திருச்சி சார்லஸ், ஜி.எம்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் எப்போதும் சந்தித்து பேசுவது வழக்கம். 

 

nn

 

இந்த முறை திருச்சி விமானநிலையத்திற்கு வந்த கார்த்திக் சிதம்பரம். முன்னாள் மேயர் சுஜாதாவிடம் என்னமா நீங்க சீட்டுக்கு அப்ளே பண்ணுங்க. என் கிட்ட ஒரு பார்மட் இருக்கு அதையும் தரேன் அதையும் சேர்த்து அப்ளே பண்ணுங்க. என்று சொல்லவும்.. சரிங்க சார்.. பண்றேன் என்று சொல்லவும். உடனே அருகில் இருந்த ஆர்.சி.பாபு அப்படியா எல்லா பேசி முடிச்சாச்சா. அதானே பாத்தேன் என்று நக்கலாக சண்டை போட. அதிர்ச்சியடைந்த முன்னாள் மேயர் சுஜாத்தா இல்லண்ணே ! பெண்கள் கோட்டாவில் சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கு அதான் அப்ளே பண்ண சொல்றாங்க, என்கிட்ட எம்.பி. சீட்டுக்கு செலவு பண்ற அளவுக்கு பணம் இல்லண்ணே! . நா சும்மா என் பேருக்கு விருப்ப மனு மட்டும் கட்டுவேன் என்று சொல்லி மழுப்பியிருக்கிறார். ஆனால் திருச்சியில் உள்ள சிதம்பரம் ஆதரவாளர்கள் நம்ப தயாராக இல்லை. 

 

கார்த்திக் சிதம்பரம் போகிற போக்கில் போட்ட குண்டு தற்போது திருச்சியில் பயங்கரமாக புகைந்து கொண்டு இருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்க'-துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'I don't want; to give seat to my brother' - Kamal campaign in support of Durai Vaiko

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், '' இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க என கேட்கிறேன்.  '' என்றார்.

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.