பிரபல நடிகர் பீலி சிவம்
காலமானார்!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம்(வயது 80) இன்று காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் கோவைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்த பி.எல்.சின்னப்பன் என்ற பீலி சிவம் 1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி பிறந்தார்.
முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா, தூரத்து இடி முழக்கம், அழகன், கங்காகவுரி, விருதகிரி, தங்க பாப்பா, அபிமன்யு, அன்று கண்ட முகம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் உறவுகள் என்று சின்னத்திரையிலும் வலம் வந்தார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.