Skip to main content

''தொட்டாலே உதிரும் கட்டடம்... உயிருக்கு யார் பாதுகாப்பு?'' - அச்சத்தில் அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

'' Falling building ... who's safe for life '' - Government Cottage Replacement Board residents in fear!

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் சிமெண்ட் பூச்சுகள் தொட்டாலே உதிர்ந்து விழும் நிலையில் இருப்பது அங்கு வசிப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர்.

 

அலமாரிகளில் பொருட்களை வைக்க முடியாத அளவிற்கு தரமற்ற முறையில் இருக்கிறது. அதேபோல் படிக்கட்டுகளில் நடந்தால் கூட இடிந்து விடுமோ என எண்ணும் அளவிற்கு தரமற்றதாக உள்ளது. பயன்பாட்டிற்காக வீட்டினுள் ஆணி அடிக்க முடியவில்லை என வீடியோ ஆதாரங்களோடு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுபற்றி பயனாளி ஒருவர் கூறுகையில், ''செல்ஃபில் ஏதாவது வைத்தால் கூட பலபலவென்று கொட்டுது. அது உறுதி கிடையாது. சும்மா பொம்மை கல்யாணம் பண்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. இத்தனை வீடு கட்டி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் இதில் கையை வைத்தால் எல்லாம் உதிர்ந்து கொட்டுகிறது. உயிருக்கு உத்தரவாதம் யார்? நீங்கள் இருப்பீர்களா உத்தரவாதமாக?'' என்றார். 

 

'' Falling building ... who's safe for life '' - Government Cottage Replacement Board residents in fear!

 

இந்தக் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் தெரிவித்துவருகின்றனர். இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அத்தொகுதியின் திமுக எம்எல்ஏ பரந்தாமன் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ''புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்