Published on 08/01/2019 | Edited on 08/01/2019

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ குமரகுரு ஆகியோரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார்.
விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி அறிவித்தார். 33 வது மாவட்டமாக தமிழகத்தில் உருவாக இருக்கிறது கள்ளக்குறிச்சி.