மறைந்த முன்னாள் திமுக தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செய்த தற்போதைய திமுக தலைவரும், கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



அதேபோல் அருகில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.இந்தநிகழ்வில் அவருடன் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.