சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறதா என்பது குறித்து நாளை (11/10/2022) சென்னையில் ஆலோசனை நடத்தப்படும். ஆலோசனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், அதிகாரிகளிடம் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறதா என விளக்கம் கேட்கப்படும். அரசு மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு நிலவரத்தை இணையதளம் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரிகள் விடுப்பில் சென்றால் குடோன்களில் இருந்து மருந்துகளை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படலாம். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம். திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலமாக குழந்தைப் பெற முடியும். பொது சுகாதாரத்துறையின் சார்பில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டையை 21 முதல் 35 வயதுடையவர்கள் வழங்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.