
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் ஆனிவேராக இருக்கும் கச்சத்தீவு அந்தோனியார் கோவிவில் இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவில், இன்று இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை காலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி தமிழ் மொழியிலும், முதல்முறையாக சிங்கள மொழியிலும் நடைபெறவுள்ளது. இலங்கையின் காலே மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க சிங்கள மொழியில் திருப்பலியினை நடத்த உள்ளார்.
இந்நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக 62 விசைப்படகுகளில் 2,103 தமிழக பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர். முன்னதாக, உளவுத்துறை மற்றும் சுங்கத்துறையால் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்ட்டனர் பக்தர்கள். இதன் பின் இலங்கை கடற்பரப்பில் அவர்களது நாட்டு கடற்படையினர் சோதனை செய்த பின்னரே பக்தர்களை அனுமதிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.