ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தபடவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அவசர கூட்டம் அதன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர்,
"ராசி மணலில் தமிழக அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். காவிரி ஆணையம் இதுவரை கூட்டப்படவில்லை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இதுவரை ஒரு முறை மட்டுமே கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இனி மாதம் தோறும் பெங்களூர் நகரத்தில் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.குறுவை சாகுபடி செய்ய ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டல்களில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள மனிதசங்கிலி போராட்டத்திற்கு விவசாயிகள் முழுமையான ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்போம். எந்த அரசியல் கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் அதற்கு ஆதரவு அளித்து பங்கேற்போம்." எனவும் தெரிவித்தார்.
பி.ஆர்.பாண்டியன், அனைத்து விவசாயிகள் சங்கம் கட்டுவதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அந்த கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். சிபிஐயில் இருக்கும் போது கோட்டூர் ஊராட்சி சேர்மனாகவும் இருந்து கட்சி பனியாற்றிவர். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து மோதலால், கட்சியில் இருந்து வெளியேறி, விவசாயிகள் சங்கத்தை கட்டி தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏதாவது போராட்டம் நடத்தினால், அதனையொட்டி ஏதாவது எதிர்மறையாக போராட்டத்தை அறிவித்து, விவசாயிகளின், பத்திரிக்கைகளின் கவனத்தை திசை திருப்புவார்.
இந்த நிலமையில் இந்திய கம்யூனிஸ் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் நடத்த உள்ளது. அதற்கு தனது ஆதரவை பி,ஆர்,பாண்டியன் ஆதரவு தந்திருப்பது நிறைவாக இருக்கிறது." என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.