![fுப](http://image.nakkheeran.in/cdn/farfuture/tVBtQmI5cS8Ichrg006flJzhjtT4sU_wq7oUvHIBvzI/1641216577/sites/default/files/inline-images/anbil%20mahesh.jpg)
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வின் மூலம் மதிப்பெண்கள் வழக்கப்பட்டுவந்தது. தற்போது கரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்துவரும் நிலையில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, தற்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடக்குமா என்று மாணவர்கள் இடையே குழப்பமான நிலை காணப்பட்டுவந்த நிலையில் தற்போது தமிழக அரசு அதற்குப் பதிலளித்துள்ளது.
அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "தமிழகத்தில் இந்த ஆண்டு நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும். மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்புக்கள் அதிகம். பள்ளிகளில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. எனவே 15க்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் அனைவருக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டும்" என்றார்.