Skip to main content

கலைஞரின் பேனாவை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

ex cm karunanidhi pen should be declared a monument

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நிலக்கோட்டையில் கலைஞரின் நினைவு நாளையொட்டி 10 ஆதரவற்ற கல்லூரி மாணவிகளுக்கு ஓராண்டு படிப்பிற்கான நிதியை வழங்க பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிதியினை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் ஆகியோர் ஆதரவற்ற 10 கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார்.  

                       

 

இந்த நிகழ்ச்சியில் 20 அடி உயரத்தில் பேனாவோடு கலைஞர் இருக்கும் கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. தமிழக மக்களின் தலையெழுத்தை மாற்றி அமைத்து தமிழுக்காக உழைத்து செம்மொழி உள்பட பல்வேறு உயர்வுகளுக்கு வழிவகுத்த  கலைஞரின் பேனாவை நினைவு சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்