ஈரோடு மாநகரில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் பாதாள சாக்கடை. குடிநீர் குழாய் மற்றும் மின்சார கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீர்மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈரோட்டில் உள்ள எல்லா சாலைகளையும் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுள்ளது மாநகராட்சி என்றும் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரிங் ரோடு சாலை பணிகளை முழுமையாக அமைக்கவேண்டும், உயர்த்தப்பட்ட வீட்டு வரியை உடனடியாக குறைக்க வேண்டும், புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை மேம்பாலம் மக்களும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, பொருளாளர் பாலு , நிலைய செயலாளர் சுரேஷ் பொன்வேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களோடு தி.மு.க. கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு எம் பி, ம.தி.மு.க. கணேசமூர்த்தி, காங்கிரஸ் தலைவர் ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், வி.சி.க விநாயகமூர்த்தி, மேலும் பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் ஈரோடு மாநகராட்சின் சீர்கேட்டையும் கோஷமாக எழுப்பினார்கள்.