மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனின் உத்தரவைமீறி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதிக்கு மய்யம் நிர்வாகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
![Dindigul mnm executive defying Kamal's order!](http://image.nakkheeran.in/cdn/farfuture/oEZRgVCacKwGT2OjcaqtVa6IkCRJiBCNd33gWbLdHhU/1576731690/sites/default/files/inline-images/asdsd.jpg)
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், மறுபரிசீலனை நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தது.
இந்நிலையில் கமலஹாசனின் உத்தரவை மீறி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ராஜசேகர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.