Skip to main content

ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்பு!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

erode district new collector take charge for today

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்து வருகிறது தமிழக அரசு. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த கதிரவன் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ். ஈரோடு ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று (16/06/2021) காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணன் உன்னி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தான் மாவட்ட நிர்வாகத்தின் முதல் பணி. அதேபோல் பாகுபாடு இல்லாமல் மக்கள் பணியாற்றுவேன். அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுக்கும்" எனக் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்