ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா இன்று மாலை ஆறு மணிக்கு தொடங்கியது. இந்தப் புத்தகத்திருவிழாவை எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியருமான பொன்னீலன் திறந்து வைத்தார்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் இலக்கிய நிகழ்ச்சியும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் சொற்பொழிவாளர்கள் அறிஞர்கள் பேச்சாளர்கள் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு இலக்கிய நிகழ்ச்சியில் பேச உள்ளார்கள்.

தமிழகத்திலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் தங்களது புத்தகங்களைக் கொண்டுவந்து இங்கு விற்பனைக்கு வைத்துள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக பிரமாண்டமாக நடைபெறும் புத்தக திருவிழாவாக இது உள்ளது.

