![professor arrested for cheating teacher](http://image.nakkheeran.in/cdn/farfuture/On9ajZd1OxvCD540L4dtEDexRweJNSOHO-vOStV9Gfk/1533347654/sites/default/files/inline-images/jail%20300.jpg)
பள்ளி ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த சின்னமணி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது சின்னமணி, ஆசிரியையிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சின்னமணி வீட்டுக்கு சென்ற ஆசிரியை, அங்கிருந்த சின்னமணியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு சின்னமணி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது உறவினர்களுடன் சேர்ந்து, ஆசிரியையை தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, கல்லூரி பேராசிரியர் சின்னமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகிறார்கள்.