Published on 30/09/2019 | Edited on 30/09/2019
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செப். 29ம் தேதி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், ''மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் ஓமலூர் அருகே, ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும். விவசாயிகளின் நலனுக்காக காய்கறி சந்தை அமைக்கப்படும். ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு வரை உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலையிலும் விமான சேவையைத் தொடங்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்,'' என்றார்.