
அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் நேற்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி சூரியம்பாளையம் பகுதி அதிமுக சார்பில் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்து தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் துணை மேயருமான கே.சி.பழனிசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாணவரணி மாவட்டச் செயலாளர் ரத்தன் பிரித்வி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ், ஈஸ்வரமூர்த்தி, சித்தோடு வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் எம்.ஜி.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.