Skip to main content

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

Published on 06/03/2025 | Edited on 06/03/2025
Enforcement Directorate raids company owned by Jagathrakshagan

இன்று காலை கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியது. கரூர் ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வருகிறது. அதேபோல் காந்திபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்சிஎஸ் சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டிலும், கரூர் காயத்ரி நகரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இவர்கள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நான்கு குழுக்களாக பிரிந்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல் சென்னையிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை பாண்டிபஜார் பகுதியில் உள்ள அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 'அக்கார் டிஸ்டிலரிஸ்' என்ற நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. எஸ்.என்.ஜே என்ற மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்