![election commission of india announcements rajya sabha election](http://image.nakkheeran.in/cdn/farfuture/D9FbZ9e7mdDehvcNMioPAd-GkYponKNM_joS4CEnoKI/1631171740/sites/default/files/inline-images/ECI%20%283%29.jpg)
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (09/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் மீதமுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 22ஆம் தேதி கடைசி நாள். அக்டோபர் 4ஆம் தேதி காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 4ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு மாலை 05.00 மணிக்குத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவின் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இந்த இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.