Skip to main content

சிகிச்சைக்காக சென்ற முதியவர்கள் சாலை விபத்தில் பலி! 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Elderly people who went for treatment die in road accident!
ராமு, லலிதா மற்றும் கோதண்டம்

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வயதான தம்பதியான ராமு (65) மற்றும் லலிதா (58) உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். அதன் காரணமாக அவர்களுக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும் அவரது மருமகன் ரமேஷ், தனது ஓட்டுநரிடம் காரைக் கொடுத்து, அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வர அனுப்பியுள்ளார். 

 

Elderly people who went for treatment die in road accident!

 

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட லலிதா மற்றும் ராமுவை ஓட்டுநர் கோதண்டம் இன்று (20.12.2021) அதிகாலை சென்னைக்கு அழைத்துச் வரும்போது, காலை கடலூர் சிப்காட் பகுதியைக் கடக்கும்போது தூங்கியபடி ஓட்டுநர் காரை சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதிவிட்டார். இந்த விபத்தில் வயதான தம்பதி ராமு, லலிதா, கோதண்டம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். 3 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த கடலூர் துறைமுகம் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்