Published on 24/01/2019 | Edited on 24/01/2019
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரனை இன்று நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை முன்பு விசாரனைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரான பால நந்தகுமார் குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் கொடநாடு பங்களாவில் திருடியதாக மீடியாக்களில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர், அவர்கள் குற்றம் உருதி செய்யப்பட்டதால் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு சயான் மற்றும் மனோஜின் வழக்கறிஞரான செந்தில் குமார் ஜாமினை ரத்து செய்ய கூடாது என வாதிடும் போது இருவரையும் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.