Published on 27/07/2022 | Edited on 27/07/2022

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கை வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு நேற்று (26/07/2022) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மனுதாரரான தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 3- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.