Published on 08/08/2018 | Edited on 08/08/2018
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் இன்று காலை 7 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அங்கே திரண்டிருந்த திமுக தொண்டர்கள், ‘’வேண்டும் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்’’ என்று முழக்கமிட்டனர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘’கலைஞர் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு’’ என்று தெரிவித்தார்.
அப்போது, கலைஞருக்கு மெரினாவில் இடம் தருவது பற்றிய கேள்விக்கு பதில்தர மறுப்பு தெரிவித்து சென்றார். இதனால் ராஜாஜி ஹால் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.