Skip to main content

கோயில் நில அபகரிப்பு; அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Enforcement Department registers case regarding Puducherry temple land grab

 

புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 64 ஆயிரம் சதுர அடி கொண்ட நிலம் ஒன்று ரென்போ நகரில் உள்ளது. ரூ. 50 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் கும்பல் ஒன்று சென்னையில் விற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்த புகார்களின் அடிப்படையில் புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

 

இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி சார் பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் இந்த கோவில் நிலத்தை பாஜக எம்.எ.ஏ ஜெயக்குமாரும், அவரது மகன் ஜான் ரிச்சர்ட்டும் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நில அபகரிப்பு புகார் தொடர்புடைய பா.ஜ.க எம்.எல்.ஏவை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்; கோவில் நிலத்தை வாங்கியவர்கள் மற்றும் கோவில் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு விற்பனை செய்த அதிகாரிகள் மற்றும் துணை போன அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று  பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

இந்த நிலையில் காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு தொடர்பாக, அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. கோவில் அறங்காவலர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 19 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் புதுச்சேரி சிபிசிஐடி போலீசாரிடம் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்