Skip to main content

கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க காட்டாற்றில் தடுப்பணை கட்டிய விவசாயிகள் (படங்கள்)

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க காட்டாற்றில் தடுப்பணை கட்டிய விவசாயிகள்

கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க அம்புலி ஆற்றின் குறுக்கே விவசாயிகள் சொந்த செலவில் தடுப்பணை கட்டியுள்ளனர். இதனால் 2 பெரிய குளங்களும் நீராதாரம் பெருகிறது.



தடுப்பணைகள் :
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம்ரூபவ் கீரமங்கலம், செரியலூர்; வழியாக அம்புலி அறு என்னும் காட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கொத்தமங்கலத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து தனி கால்வாய் மூலம் வரும் தண்ணீர் சேந்தன்குடியில் உள்ள 3 கி.மீ. சுற்றளவுள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரி நிரம்பும். ஆந்த ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் பெரியாத்தாள் ஊரணி ஏரி தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

அதே போல நகரம் பெரியகுளம், கீரமங்கலம் கல்லாகுளம், கடியாகுளம் ஆகிய பெரிய குளங்களும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பால் அம்புலி ஆற்று தண்ணீர் செல்ல முடியாமல் தண்ணீர் இன்றி காட்சி அளிப்பதுடன் காட்டாற்று தண்ணீரும் வீணாகி கடலுக்கு சென்றது. கடந்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் சுமார் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. அதனால் மரங்களும் கருகிவிட்டது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

விவசாயிகள் கட்டிய தடுப்பணை :
இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் அம்புலி ஆற்றில் 3 கி.மீ க்கு ஒரு இடத்தில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர் சேமிக்க முடியும் என்றும் அதனால் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பல முறை

அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில் கீரமங்கலம் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து நிலத்தடி நீரை பாதுகாக்க தங்கள் சொந்த செலவில் அம்புலி ஆற்றில் தடுப்பணை கட்டியதுடன் அந்த அணையில் தேங்கும் தண்ணீர் பெரிய குளங்களான கல்லாகுளம்ரூபவ் மற்றும் கடியாகுளம் ஆகிய இரு குளங்களுக்கும் தண்ணீர் செல்ல வரத்து வாய்க்கால்களையும் வெட்டி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் கீரமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் வரத்து வாய்க்கால்கள் வெட்ட தயாராகும் விவசாயிகள் :
கீரமங்கலம் பகுதி விவசாயிகள் சொந்த செலவில் தடுப்பணை அமைத்து குளங்களில் தண்ணீர் தேங்க வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்துள்ளதைக் கண்ட நகரம், மற்றும் சேந்தன்குடி விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது.. காட்டாற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து அருகில் உள்ள குளங்களில் தண்ணீரை தேக்கி சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதனால் கீழே சென்ற நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் காட்டாறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றிகனால் மேலும் தண்ணீர் செல்ல வசதியாக இருக்கும் என்றனர்.

விவசாயிகளே நிலத்தடி நீரை சேமிக்க தடுப்பணை கட்டியதை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பாராட்டியதுடன் தங்கள் கிராமங்களிலும் தடுப்பணைகள் கட்டும் பணிகளின் தீவிரமாக உள்ளனர்.

-பகத்சிங்

சார்ந்த செய்திகள்