

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
நடிகர் ரஜினிகாந்த்தை இன்று (10.01.2024) மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார்.
இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள விளக்க செய்திக்குறிப்பில், நடிகர் ரஜினிகாந்த்தை இன்று (10.01.2024) மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ரஜினிகாந்த் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.