Skip to main content

ஆசிரியர் சொன்ன அறிவுரை - தேர்வு பேப்பரை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்

Published on 19/02/2025 | Edited on 19/02/2025
pradeep ranganathan shared his college teacher advice for dragon movie promotion

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘டிராகன்’ படம் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது.  

டிராகன் படத்தை ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள நிலையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் கல்லூரி மாணவராக டிரெய்லரில் வரும் பிரதீப் ரங்கநாதன் அரியர் வைத்துக் கொண்டு படிக்காத மாணவராக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சிகள் மாணவர்களை தவறாக வழி நடத்த தூண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. 

படத்தின் புரொமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. படத்திற்கான முன் பதிவு தற்போது தொடங்கிய நிலையில் பிரதீப் ரங்கநாதன், தனது எக்ஸ் பக்கத்தில், அவர் கல்லூரி படிக்கும் போது ஆசிரியர் கூறியதை நினைவுகூர்ந்து அதை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்வுகளில் கதைகள் எழுத வேண்டாம் என்று ஆசிரியர் சொன்னார், அதனால் அதை என் தொழிலாக மாற்றிக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டு கல்லூரி யூனிட் டெஸ்டில் அவரது வேதியல் பேப்பரில் அவரது ஆசிரியர் குறிப்பிட்டிருந்ததை புகைப்படமாக எடுத்து அதை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் பின் குறிப்பாக இது வெறும் யூனிட் தேர்வுதான், மெயின் தேர்வுகளில் நான் நன்றாகப் படித்தேன் எனவும் பதிவிட்டிருக்கிறார். 

சார்ந்த செய்திகள்