Skip to main content

தலைக்கேறிய போதை; நெய்வேலி மதுப்பிரியர் அட்ராசிட்டி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Drunk man lying on EB breaker box in Neyveli

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே அமைந்துள்ளது நெய்வேலி வட்டம். இங்கு, 29 வது வட்டத்தில் உள்ள ரவுண்டானாவில் இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மின்சாரம் செல்ல, பிரேக்கர் பெட்டி ஒன்று ஹைமாஸ் விளக்கு கம்பத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 29 வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஹைமாஸ் விளக்கு கீழே கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். மது போதையில் ஆசாமி ஒருவர் பட்டப் பகலில் கொளுத்தும் வெயிலில் மின்சாரம் செல்லக்கூடிய ஹைமாஸ் விளக்கின், பிரேக்கர் பெட்டி மீது ஏறி படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் அதிர்ச்சியில் மின்சாரம் செல்லும் ஆபத்தை உணராமல் தூங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமியை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரேக்கர் பெட்டியில் படுத்துக்கொண்டு ஹைமாஸ் விளக்கின் கம்பத்தின் மீது கால்மேல் கால் போட்டுக்கொண்டு போதை ஆசாமி தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் போதை ஆசாமி தூங்கிக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் இருசக்கரத்தில் சென்ற நபர் நெய்வேலி வட்டம் 29 ரவுண்டான வழியாக செல்கிறார். அப்போது, அடிக்கும் வெயிலில் போதை ஆசாமி மெய் மறந்து ஆபத்தான நிலையில் மின்சாரப் பெட்டியின் மீது தூங்கிக் கொண்டிருக்கிறார். வீடியோவில் சட்டையை பிரேக்கர் பெட்டி மீது போட்டுவிட்டு போதை ஆசாமி அதன்மேல் படுத்துக்கொண்டு, காலைத்தூக்கி ஹைமாஸ் விளக்குக் கம்பத்தின் மேல் வைத்துக்கொண்டு உறங்குகிறார். தலைக்கேறிய போதையில் இருந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் எச்சரித்தும் கண்டுக்கொள்ளாமல் தூங்கியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், போதை ஆசாமிகளின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டு கொள்வது இல்லை என்று நெய்வேலி பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மின்சாரம் செல்லக்கூடிய பிரேக்கர் பெட்டி மீது ஏறி கால் மேல் கால் போட்டு போதை ஆசாமி தூங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை” - அமைச்சர் முத்துசாமி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Minister Muthusamy said total liquor ban cannot be brought in Tamil Nadu

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.  

அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்க மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மணி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியுமா என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.     

Next Story

மதுபோதையில் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; கதிகலங்கிய மாணவர்கள்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
bus carrying college students was driving under influence of liquor

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி பாஷா (26). இவர் மேல்விஷாரம் பகுதியில் உள்ள அப்துல் ஹக்கீம் தனியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பாகாயம் நோக்கி பேருந்தை இயக்கியுள்ளார். 

பணியின் போது மது போதையில் இருந்த ஹாஜி பாஷா மாணவர்கள் அச்சப்படும் வகையில் அஜாக்கிரதையாக சாலையில் அங்குமிங்கும் ஆட்டியபடி பேருந்து ஓட்டியுள்ளார். சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு வந்துள்ளனர். பின்னர் பேருந்தில் பயணித்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, வேலூர் கோட்டை எதிரே உள்ள தெற்கு காவல் நிலைய பகுதியில் ஒரு மாணவனின் பெற்றோர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த தெற்கு காவல் நிலைய போலீசார் மது போதையில் பேருந்து இயக்கிய குற்றத்திற்காக சுமார் 15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தை ஓட்டுநர் மது போதையில் இயக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.